Wheel_Pattern
Drop-Down
close
Preface

என் கதைகள் – ஒரு அறிமுகம்

கதை எழுத ஒருவன் அதிகம் படித்திருக்க வேண்டிய தில்லை. வாழ்க்கையில் வாழ்ந்த அனுபவமே போதும். என்னுடைய எண்பது வருட வாழ்க்கையே எனக்கு ஒரு பாடமாக இருந்திருக்கிறது. உண்மைக் கதைகளை படிப்போர்கள் ஒதுக்கி விடுவார்கள். அது என்ன ஸார் உப்புச் சப்பு இல்லாத கதைகள் என்று பட்டம் வேறு சூட்டிவிடுவார்கள்.

அதே சமயம் கற்பனைகதைகளும் எடுபடாது. காரணம் கதைகள் முழுக்க முழுக்க கற்பனையாக இருந்தால், கதை நம்ப முடியவில்லை என்று ஒதுக்கிவிடுவார்கள்.

அப்படி என்றால் கதை எப்படி எழுதவேண்டும் என்ற கேள்வி எழளாம். அதனால் கதைகள் உண்மையாகவும் இருக்கவேண்டும் அதே சமயம் கொஞ்சம் கற்பனையும் இருக்கவேண்டும்.

என்னுடைய கதைத் தொகுப்பு வாழ்கையிம் அடிப்படையில் எழுதப்பட்டது தான். ஆனால் நான் என் கற்பனையின் உதவியுடன் ஒரு எதிர்பாராத முடிவு இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் என் கதைகளை எழுதியுருக்கிறேன்.

ஒரு சில கதைகள் சமுதாயத்தை சீர்திருத்தம் செய்யும் நோக்கத்தில் இருக்கும் மற்றபடி, தெரிந்த விஷயம் தெரியாத விவரம் என்ற தலைப்பில் அந்த விஷயத்தில் அடிப்படைக் காரணத்தை எழுத முயன்றிருக்கிறேன்.

அடுத்து என் புதுக்கவிதைத் தொகுப்பைபற்றி ஒரு சில வரிகள். அவைகள் அன்றாடம் செய்தித்தாள்களில் வரும் செய்திகளையோ, அல்லது அன்றாடம் நான் வீட்டிலும், அலுவலகத்திலும், இல்லை நான் காலையில் பார்க்கில் சந்திக்கும் நண்பர்களைப் பற்றியும் என் அனுபவத்தை கவிதை ரூபமாக நகைச்சுவை கலந்து எழுதியிருக் கிறேன். இது கதைகள், கவிதைகள் படிப்போற்கு ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக்கும் என்று நம்புகிறேன்.